பொதுபல சேனாவையும் அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரரையும் பாதுகாப்பது மஹிந்த ராஜபக்ஷவே என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக கூறியிருப்பது முழுப் பூஷணிக்காயையும் சோற்றில் மறைப்பது போன்ற கதையாகும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம்.அஸ்வர் அவர் தெரிவித்தார்.…
இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த கொலை வெறியாட்டத்துக்கு சவூதி அரேபியா, கத்தார் போன்ற அரபு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஆதரவளித்ததுடன், இராணுவ, பொருளாதார உதவிகளையும் செய்தது. 1996 இல் இருந்து தலிபான் அரசினால் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி…
நீதிமன்றை அவமதித்தது, மற்றும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் விடுத்தது, மதநிந்தனை ஆகிய குற்றங்களில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் பொதுபல சேனாவின் ஞானசார தேரரை, கைது செய்யுமாறு சற்றுமுன்னர் கோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இரு தடவைகள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமை காரணமாகவே இந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தன்னை கைது…
தர்கா நகரை மையமாக வைத்து இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன் அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கலவரத்துக்கு இன்றுடன் மூன்றாண்டுகளாகின்றன. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நேசத்துடன் வாழ்ந்துவரும் சிங்கள – முஸ்லிம் மக்களது உறவுக்கு கறுப்புப்புள்ளியிட்ட அளுத்கம கலவரம் கடந்த…
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நாட்டில் தற்போது அரங்கேற்றப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை வைத்து, உலமா சபை உட்பட முஸ்லிம் சிவில் அமைப்புகள் மக்களை அமைதியாக இருங்கள் என்று கூறிக் கொண்டிருக்கக் கூடாது. முஸ்லிம்…
சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் 14 ஆம் திகதி, புதன்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள், மஹியங்கனையின் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக பொதுபல சேனா முக்கியஸதர் நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்…
அண்டை நாடான கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்ததற்கு பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த அந்நாட்டு முன்னணி மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டார் நாட்டவர் தங்கியிருக்க தடை விதித்தது மற்றும் ஏனைய பொருளாதார கட்டுப்பாடுகள் உட்பட பஹ்ரைனின்…
புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு 520 உலர்உணவூப்பொதிகள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்மூதூர் தோப்பூர் மற்றும் குச்சவெளி பிரதேசங்களைச் சேர்ந்தவறிய குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் சிறிலங்காநிறுவனத்தினால் 12ம் திகதி ஞாயிறு வினியோகம்செய்யப்பட்டன. இவ் வினியோக நிகழ்வுகளுக்கான களஏற்பாடுகளை முஸ்லிம் எய்ட் இன் பங்காளர் அமைப்புகளானரெக்டோ தடயம் பெடோ ஆகிய சமூக சேவை அமைப்புகள்மேற்கொண்டிருந்தன. ரமழான் மாதம் ஆரம்பத்திலிருந்து உலர் உணவூப் பொதிகளைபல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம் எய்ட் வினியோகித்துவருகின்றது. இம்முறை கடுமையான வெள்ளத்தினால்பாதிக்கப்பட்ட ரத்னபுர மற்றும் மாத்தற மாவட்டத்தைச் சேர்ந்தவறிய குடும்பங்களுக்கான உலர் உணவு வினியோகத்திற்குமுன்னுரிமை வழங்கப்பட்டு ரமழான் மாத தொடக்கத்தில்வினியோகங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் உலமாக்கள் முஸ்லிம்எய்ட் பணியாளர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் இன் பங்காளர்அமைப்புகளின் உறுப்பினர்கள் உலர் உணவு வினியோகநிகழ்வுகளில் பங்கேற்றனர் -அஸீம் கிலாப்தீன் –
கிழக்கு முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கு மாகாணத்தில் நேற்று பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா பாடசாலையின் விவேகானந்தா கலையரங்கத்தில் இடம்பெற்றது, இதன்போது சிங்களம் தமிழ் மற்றும் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான…
முன்னாள் ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா மறைந்து இன்று (15) வியாழக்கிழமை ஓராண்டு நினைவு தினமாகும். முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல, முழுநாடும் அவரை மறக்க முடியாது என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். நினைவு தினம் பற்றி…